இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

Monday, November 22nd, 2021

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை காலை கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் நெதர்லாந்தில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: