இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் !

Thursday, January 12th, 2017

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் யோசனை முன்வைத்துள்ளது.

நேற்றையதினம் குறித்த யோசனையை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது.

இதேவேளை மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டு இந்த வரிச்சலுகையை மீண்டும் வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்க வேண்டுமாயின் ஐரோப்பிய ஆணைக்குழுவின் யோசனைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் என்பன அனுமதி வழங்க வேண்டும். இதனை மேற்கொள்ள சுமார் நான்கு மாத காலம் செல்லும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மூலம் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட உற்பத்தி பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகள் வரிவிலக்கு வழங்கும். தைத்த ஆடைகள் மற்றும் மீன் உற்பத்திகள் இவற்றில் பிரதானமாகும்.

இவற்றுக்கு ஐரோப்பிய நாடுகள் 66 வீத வரியை அறவிடுகின்றன. ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்த பின்னர், இவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பதுடன் இந்த பொருட்கள் குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

european-union-export

Related posts:


சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகள் அடை...
குற்றவாளிகளை சிறையில் அடைப்பதனால் குற்றச்செயல்களை தடுக்க முடியாது - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்...
நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்த...