இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ் !

Monday, February 20th, 2017

எச்.ஐ.வி. எய்ட்ஸ் வைரஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

அதன் பணிப்பாளர், மருத்துவர் சிசிர லியனகே இதுபற்றி கூறுகையில், 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் தாய்மார்களில் 95 சதவீதமானர்வள் எயிட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கியுபா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதை தடுத்த நாடுகள் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

A laboratory technician examines blood samples for HIV/AIDS in a public hospital in Valparaiso city

Related posts: