இலங்கைக்கு புதிய இராஜதந்திரிகள் பலர் நியமனம்!

Saturday, February 2nd, 2019

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 இராஜதந்திரிகளும் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் இந்த நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்லோவாகியா, பெலரஸ், மாலி, ஆர்மீனியா, சால்வடார், கம்போடியா, மாலைத்தீவுகள், இஸ்ரேல், ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் இதன்போது நியமனக்கடிதங்களை கையளித்துள்ளனர்.

அத்துடன் கயானா , உகாண்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானியர்களும் தமது நியமனக்கடிதங்களை கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்...
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் - கண் மருத்துவர்கள் வலியுறுத்து!
தேர்தல்கள் ஆணைக்குழுவில் மூன்று நாள் செயலமர்வு – பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் இன்று தேர...