இலங்கைக்கு பாராட்டு!

Saturday, September 23rd, 2017

அடிப்படை விடயங்கள் பலவற்றில் இலங்கை அடைந்த முன்னேற்றம் குறித்து உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

அபர்ணா அம்மையார் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார். சுகாதாரம், கல்வி மற்றும் எழுத்தறிவு போன்ற விடயங்களில் இலங்கை அதிக முன்னேற்றத்தை காண்பித்திருப்பதாக  குறிப்பிட்ட அவர்  நிலைபேறான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் அரசாங்கம் வழங்கிய வழங்கல் மற்றும் பங்களிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்த நிலைமைகளை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருங்கிய வகையில் செயல்படுவதற்கு உலக வங்கி தயாராக இருப்பதாகவும் திருமதி அபர்ணா இந்த சந்திப் போது மேலும் தெரிவித்தார்.

Related posts: