இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா!

Wednesday, January 24th, 2018

 

சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முனெடுக்கும் வேலைத்திட்டத்தை ஆதரித்து ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

அண்மையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் குழு தொடர்பான கூட்டம் இடம்பெற்றபோதே இலங்கையின் இத்திட்டத்ததை வரவேற்றுப்பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் தெருவில் வாழும் பிள்ளைகளுக்கான விசேட வேலைத்திட்டங்கள், சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக குடும்பக்கட்டமைப்பை உறுதி மிக்கதாக மாற்றுதல், விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவை பற்றி கூடுதல் கவனம்செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: