இலங்கைக்கு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை –  பிரதி வெளிவிவகார அமைச்சர்!

Wednesday, February 15th, 2017

ஐக்கிய நாடுகள் மனித உரிமப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த அமர்வுகளின் போது இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என பிரதி வெளிவிவகார  தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

சில அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுதல், மனித உரிமை நிலைமைகள் குறித்து விவாதம் செய்தல் போன்ற விடயங்கள் நடைபெற்றாலும் இம்முறை அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறாது. 2015ம் ஆண்டில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது அதன் முன்னேற்றம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த அமர்வில் உரையாற்ற உள்ளார் என பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

harsha.650

Related posts: