இலங்கைக்கு ஜப்பான் 14 பில்லியன் கடனுதவி!

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் பத்து பில்லியன் யென்களை நீண்ட கால கடனுதவியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் இலங்கைப் பெறுமதி 14.2 பில்லியன் ரூபாவாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னெடுப்புகளைப் பாராட்டும் வகையில் ஜப்பானிய அரசாங்கம் இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளது.
இந்நிதியில் கடந்த தேர்தல்களின்போது அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 25 வருட காலங்கள் வரை திருப்பிச் செலுத்தும் கால எல்லை கொண்ட நீண்டகாலக் கடனான இக்கடனுதவிக்கு வருடாந்தம் 1.4 வீத குறைந்த வட்டி அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
தீவகத்தில் குவிந்துள்ள அரிய பறவைகள் !
கொரோனா சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறிய பின்னர் பிசிஆர் பரிசோதனை செய்வது அவசியமற்றது - சுகாதார சே...
|
|