இலங்கைக்கு சீன அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் – விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பு!

Sunday, October 11th, 2020

சீன அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த கடனைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இன்றி 10 ஆண்டு காலப்பகுதியில் கடன் திருப்பிச் செலுத்தப்படவுள்ளது என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சலுகைக்கடன் கொரோனா சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனித்தன்மை அழிக்கப்படுகின்றது - பூசகர...
ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி - வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முட...
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு - மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன...