இலங்கைக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்!

Monday, October 30th, 2017

அமெரிக்க கடற்படையினர் இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

உலகில் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகின்ற USS நிமிடஸ் என்ற அமெரிக்க விமான போக்குவரத்து கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

USS நிமிடஸ் என்ற கப்பலுடன், USS பிரின்ஸ்டன், USS ஹொவாட், USS ஷவூப், USS பிரின்க்னே மற்றும் USS கிட்ஸ் ஆகிய போர்க்கப்பல்களே இலங்கையை வந்தடைந்துள்ளன.1985 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் விமான போக்குவரத்துக் கப்பல், இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இதுவே முதற்தடவையாகும்.23 மாடிகளை கொண்ட நிமிட்ஸ் கப்பல், 333 மீட்டர் நீளமுடையதாகும். 5,000 பேர் தங்குவதற்கான வசதிகளை இந்தக் கப்பலில் உள்ளன.இந்த கப்பலிலுள்ள சமையல் அறையில் தினமும் 18,000 பேருக்கான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.கொழும்பை வந்தடைந்த நிமிட்ஸ் கப்பலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை இலங்கையில் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

அமெரிக்க போர்க்கப்பல்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


சட்டத்தை நடைமுறைப்படுத்த தாக்குதலும் நடத்துவோம் - பொலிஸ் மா அதிபர்!
'நாடா' சூறாவளி யாழ். குடாநாட்டில் மையம்: அவதானமாகச் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத...
தொழிற்கல்வியில் இலவசக் கல்வி : இந்தஅரசாங்கமே உறுதி செய்தது - ஜனாதிபதி
சங்கத்தானையில் புகையிரதம் மோதிக் குடும்பஸ்தர் உயிரிழப்பு  
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் 15ஆம் திகதி!