இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – பிரித்தானியா!

மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டும் என, பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்திற்கான பொதுநலவாய அமைச்சர் ஆலோக் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு இலங்கையில் போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட யோசனைகளை நிறைவேற்ற காலம் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
உள்ளூராட்சி அமர்வுகள் சிறப்பாக இடம்பெற சகல வசதிகளுடன் கூடியதாக மண்டபங்களைச் சீராக்கவும் - சபைகளின் ச...
இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர...
8 ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – அதிபர் ஆசிரியர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்...
|
|