இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சு – வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Wednesday, May 25th, 2022

இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அதேசமயம் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நாடுகளில் ரஷ்யாவே முதன்மைவாய்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ரஷ்ய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடியாக பேச்சுக்களை முன்னெடுத்த போதிலும், அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து இதுவரை சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..  

000

Related posts: