இலங்கைக்கு உலக வங்கி 25 மில்லியன் டொலர் கடன் உதவி!

Friday, December 20th, 2019

உலக வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை செயல்திறன் மிக்க நிர்வாகம் மற்றும் பொது நிதிமுகாமைத்துவ முதலான செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக மேம்படுத்துவதற்கு இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு முன்னெடுத்துள்ள செயல்திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடனான பொது மக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் மனித வள செயல்திறனை மேம்படுத்துவதற்கான பொறிமுறை அபிவிருத்திக்காக இது செலவிடப்படவுள்ளது.

பொது நிதிமுகாமைத்துவம் தொடர்பில் நிதி அமைச்சர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தாம் உதவி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Related posts: