இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருகிறது – வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவிப்பு!
Saturday, September 3rd, 2022இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் நிலை உடன்படிக்கையை எட்டியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த அவர், அது எப்படி முன்னேறுகிறது என்பதை இந்தியா அவதானிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடனாளிகளின் சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை, பிரச்சினைகளுக்கு உள்ளான இலங்கை தேசத்திற்கு முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது. இது பல்வேறு வடிவங்களில் இப்போது 4 பில்லியன்களாகி உள்ளது. தொடர்ந்தும் கடன் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்படுகிறது என்று பாக்சி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று கொழும்புக்கு விஜயம் செய்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் ஏற்பட்டால், அவற்றை இந்தியா உன்னிப்பாக அவதானித்து அதனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|