இலங்கைக்கு உதவி செய்ய பிரித்தானிய பிரதமர் இணக்கம் – பிரதமர் ரணில் தகவல்!
Tuesday, May 31st, 2022பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து தான் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் ஏற்றுமதி சார்ந்த திறந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதற்கு உதவுவது போன்ற துறைகளில் எமக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்” என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|