இலங்கைக்கு இந்தியாவின் நட்புறவிலான உதவிகள்!

Monday, January 8th, 2018

இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியா சார்பாக 209 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்ற போது 108 அம்புலன்ஸ் வண்டி சேவையை அமுல்படுத்த உறுதி அளித்தார். அதன்படி இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு ரூ.50.81 கோடி மதிப்பில் 88 அம்புலன்ஸ் வண்டிகள் கடந்த 2016 ஜூலையில் வழங்கப்பட்டு இலங்கையின் மேற்கு, தெற்கு பகுதிகளில் அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டது.

தற்போது அம்புலன்ஸ் வண்டி சேவையை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்த கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர், இந்தியாவிற்கான இலங்கை தூதர் தரஞ்ஜித் சிங் சண்டு ஆகியோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

Related posts:

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கியது இலங்கை – குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக ...
2020 நாடாளுமன்ற தேர்தல் : முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியாகும் - மஹிந்த...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் - நாடாளுமன்ற ச...