இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்!

Tuesday, November 1st, 2016

வளிமண்டலத்தில் உருவாகியுள்ள குழப்பநிலை காரணமாக வங்காள விரிகுடாவின் கிழக்கே படிப்படியாக தாழமுக்கம் உருவாகி வருவதாகவும் இதன் காரணமாக நாடுமுழுவதும் கடும் மழை பெய்யுமென வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கடும் காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் இலகுவாக அனர்தங்களுக்கு உள்ளாகும் பிரதேசங்களில் வாழ்வோர் அதற்கான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்கம் காரணமாக இவ்வாரம் நாடு முழவதும் கடும் மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நவம்பர் இக்காலப்பகுதியில் பெய்யும் மழையின் அளவு 100 மில்லிமீற்றரிலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Kalpana1-sat-image1

Related posts: