இலங்கைக்கு அமெரிக்காவில் சுங்கத் தீர்வை!

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பயணப் பண்டங்களுக்கு அமெரிக்காவில் சுங்கத் தீர்வை கிடைக்கவுள்ளது.
ஜிஎஸ்பி வரிச்சலுகையை அனுபவிக்கும் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சகல பயண ஏற்றுமதிகளையும் சுங்கதீர்வை விலக்களிப்பு திட்டத்தில் உள்வாங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பயணப்பொதிகள், பணப்பைகள் போன்றவற்றுக்கு அமெரிக்க சந்தையில் சுங்கதீர்வை கிடைக்கும். இதற்கு முன்னர் ஆறு முதல் 20 சதவீதம் வரையிலான தொகை தீர்வையாக அறிவிடப்பட்டது.
அமெரிக்க அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் அந்நாட்டு சந்தையில் இலங்கை உற்பத்திகளுக்கு மீண்டும் சந்தை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அமெரிக்க சந்தைக்கு பயண பண்டங்களை ஆகக் கூடுதலாக ஏற்றுமதி செய்யும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் இணையும் வாய்ப்பு கிடைக்கின்றது.
Related posts:
|
|