இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!

Monday, March 12th, 2018

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் இன்று  (12) தனது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழிற்கு வருகை தந்த இவர் முதன் முதலாக யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்றிருந்தார்.

ஆதன் பின்னர், இன்று (12) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த ஆறுமுகம் நடராஜன் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்து டெல்லிக்குப் பயணமாகிய நிலையிலேயே, புதிய தூதுவராக சங்கர் பாலசந்திரன் டெல்லியில் இருந்து யாழிற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


சமூக சீரழிவுகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் - ஈ.பி.டி.பியின் நல்லூர்...
இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பி...
தமிழரசுக் கட்சியின் காடையர்களால் வேலணை வங்களவடியில் கொலைவெறித் தாக்குதல் – இரு இளைஞர் ஆபத்தான நிலையி...