இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை!
Wednesday, June 16th, 2021இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சங் நியமிக்கப்படுவார்.
தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான தூதுவராக அலெய்னா டெப்லிட்ஸ் செயற்பட்டு வருகின்றார்.
இவர் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2 மாதங்களில் 600 தொன் மீன் ஏற்றுமதி!
மின்னுற்பத்தி நிலையத்தில் பாரிய தீ பரவல்!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு - கடல்சார் சூழல் பாது...
|
|