இலங்கைக்கான பயண தடையை நீக்கியது ஜப்பான்!

Wednesday, July 3rd, 2019

ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான் தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரிக்கும் வகையில் விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடையை நீக்கியுள்ளது.

இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான விடயங்களை கவனத்திற் கொண்டு இந்த தடையில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் அரசாங்கம் விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடை Level I ஐ இல் தளர்வு ஏற்படுத்தி இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஜப்பான் பிரஜைகள் போதுமான விழிப்புணர்வுடன் இலங்கையில் இருக்கும் தருணத்தில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

Related posts: