இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா – இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்து!

Sunday, June 12th, 2022

இலங்கைக்கு வர தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பொருளாதார நிலை, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பாக தொடர்ந்து காண்காணித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அதனை கலைப்பதற்காக பாதுகாப்பு தரப்பினரால் கண்ணீர் புகை மற்றம் நீர்தாரை பிரயோகம் என்பன நடத்தப்பட்டுள்ளன.

எனவே, அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை தவிர்ப்பதோடு விழிப்புடன் செயற்பட வேண்டும் என பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளிடம் கோரியுள்ளது.

அத்துடன் இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: