இலங்கைக்கான சீனாத் தூதுவர் சியான் லீங் தலைமையிலான குழுவினர் யாழ். விஜயம்
Tuesday, June 14th, 2016
நான்கு நாள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சீனாத் தூதுவர் சியான் லீங் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை(14-06-2016) யாழ். குடாநாட்டிற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டனர்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்ட மேற்படி குழுவினர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஐயம் மேற்கொண்ட குறித்த குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகளில்,கல்வி,மீள்குடியேற்றம்,சமூக விடயங்கள்,தொழில்வாய்ப்புகள் தொடர்பாக இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
Related posts:
|
|