இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் முக்கிய நாடுகள் – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் பிரான்ஸ், ஜப்பான் இந்தியாவுடன் சீனாவும் இணைந்து கொள்ள முடியும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் ஜப்பான் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டுள்ளன.
இந்த கடன் நிவாரண திட்டத்தில் இலங்கையின் பாரிய கடன் வழங்குனரான சீனாவும் இணைந்து கொள்ள முடியும் என சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணத் திட்டங்களை துரிதப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் அவர் கோரியுள்ளார்.
மேலும் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் ஈட்டும் நாடு ஒன்று பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு உதவி வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த குழுவானது இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் என்பனவற்றுக்கு வரையறுக்கப்படவில்லை எனவும் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் இதில் இணைந்து கொண்டு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|