இலங்கைக்கான உதவிகள் 92 சதவீதமாக குறைப்பு!

download Wednesday, September 13th, 2017

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை அமெரிக்கா தமது 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் 92 சதவீதமாக குறைப்பதற்கு அந்தநாட்டின் ஜனாதிபதி டரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

எனினும் இதற்கு அமெரிக்க செனட் சபையின் நிதியமைப்பு குழு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுஇலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள நிலையில், அதனுடனான நல்லுறவு அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமாகும்.

இந்தநிலையில் அதற்கான உதவி நிதியை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயம் இல்லை என்று செனட் சபையின் நிதியமைப்பு குழு அறிவுறுத்தியுள்ளது.2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், இலங்கைக்கான சகல உதவிகளுக்குமாக 43 மில்லியன் டொலர்களே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது