இலங்கைக்கான அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் தலைமையிலான  குழுவினர் யாழ். விஜயம்!

Thursday, June 23rd, 2016
இலங்கைக்கான அமெரிக்கா நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தூதுவர் நஸ்ஸீம் மைரீக்கார் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய குழுவினர் நேற்றுப் புதன்கிழமை(22) யாழ். மாவட்டத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டனர். குறித்த குழுவினர் யாழ். மாவட்டச்  செயலகத்திற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனையும்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மாவட்டத்தின் அரசியல் ரீதியான மாற்றங்கள் தொடர்பான  மக்களின் அபிலாசைகள், மற்றும் மீள்குடியேற்றங்களில் காணப்படும் இடையூறுத்  தன்மைகள் ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
அதனைத் தொடந்து கருத்துத்  தெரிவித்த யாழ். மாவட்ட  அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்,
யாழ். மாவட்டத்தில் தற்போது இளைஞர் ,யுவதிகளின் வேலைவாய்ப்புச்  செயற்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்புக்களை எவ்வாறு பெற்றுக்கொடுத்தல்,  முதலீட்டாளர்கள் எவ்வாறு கவரப்படவேண்டும்?  போன்ற பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

Related posts: