இலங்கைக்காக செய்ய முடியாதது எதுவுமில்லை!

இலங்கைக்காக தமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லை என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார்.
பங்களாதேஷ் நாட்டுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டாக்கா நகரில் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த விஜயம் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை – பங்களாதேஷ் உறவின் மைல்கல்லாகுமென அவர் மேலும் தெரிவித்தார். பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு இதன்போது ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இதேவேளை இருநாட்டு அரச தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற உள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்பட உள்ளன.
Related posts:
|
|