இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதை பிற்போடுமாறு கோரிக்கை

உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.கானாவில் அமுலாக்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்ட மூலத்தின் பிரதியே, தற்போது இலங்கையிலும் அமுலாக்க முயற்சிக்கப்படுகிறது. எனவே, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும்.இந்தநிலையில், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதை பிற்போடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய முல்லைத்தீவு செல்கிறார் அமைச்சர் விஜயமுனி!
40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு!
சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!
|
|