இறைமையுள்ள நாடு ரீதியில் தீர்மானம் எடுக்கக்கும் வல்லமை அரசாங்கத்திற்கு உள்ளது – அமைச்சர் மங்கள சமரவீர !

Friday, March 17th, 2017

இலங்கை இறைமையுள்ள நாடு ரீதியில் தீர்மானம் எடுக்கக்கூடிய வல்லமை அரசாங்கத்திற்கு உள்ளது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்ற இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நாட்டின் அபிவிருத்தி குறித்து அச்சம் கொண்டுள்ள குழுக்கள் மக்களை தவறான திசையில் திருப்பப்பார்க்கின்றனர் என்றும் கூறினார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஊழல் மோசடிகள், ஆட்கொலைகள் முதலான சம்பவங்களில் உண்மை நிலை தற்போது அம்பலமாகி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்:

இலங்கை மீது வலிந்து திணிக்கப்பட்ட சர்வதேச விசாரணையை சமகால அரசாங்கத்தால் நிறுத்த முடிந்தமை நாட்டு மக்கள் பெற்ற வெற்றியாகும்

இறைமையுள்ள தேசமென்ற ரீதியில் தீர்மானம் எடுக்கக்கூடிய ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு. இதற்கு எவரும் முட்டுக்கட்டை போடமுடியாது. எனவே போலி பிரசாரங்களை பரப்பி மக்களை ஏமாற்றவும் முடியாதென அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகக் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இதில் அரசியல் யாப்பின் மீதான 13ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பின் ஊடாக தேசத்தை இல்லாதொழித்தல் என்ற தலைப்பில் அது எழுதப்பட்டிருந்தது. இதில் உண்மை திரிபுப்படுத்தப்பட்டிருந்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

காலாவதியான கடுமையான சட்டங்களை திருத்தியமைத்து நவீன உலகிற்கு பொருத்தமான சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை திரு மஹிந்த ராஜபக்ஷ தேசத் துரோகம் என சித்திரிக்கிறார். இது நகைப்பிக்கு இடமான விஷயமென அமைச்சர் கூறினார்.

Related posts: