இறுதியாண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை!

Tuesday, July 7th, 2020

கொரோனா நெருக்கடியினால் பிற்போடப்பட்டிருந்த பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்ரெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதியளித்த நிலையில் செப்ரெம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்தலாம் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தேர்வுகளை நேரடியாகவோ அல்லது இணையம் ஊடாகவோ நடத்துவதலாம் எனவும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்வுகளை எழுதமுடியாதுள்ள மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாய்ப்பு நடப்பாண்டு தேர்வுகளுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுப்பட்டிருந்த நிலையில் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.  தொடர்ந்து மூன்று மாதங்களாக முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டு வருவதானால் கல்லூரி பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

Related posts: