இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் – பொலிஸ் திணைக்கள பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பொலிஸ் திணைக்கள பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் சகோதரர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில், இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை பேச்சாளர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், அவர் 5 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின்போது, அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான போதுமான சாட்சியங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதனால், அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள பேச்சாளர் கூறியுள்ளார்.
விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவை நிறைவடையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|