இறுக்கமான நடைமுறையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை – மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

Thursday, July 1st, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மாகாணங்களுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவ்வாறு பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: