இறப்பர் பொருள்களை வீடுகளில் எரிக்கவோ  புதைக்கவோ வேண்டாம் – யாழ்ப்பாணம் மாநகரசபை!

Tuesday, October 10th, 2017

குடியிருப்பாளர்கள் பழுதடைந்த இறப்பர் பொருள்களை எரியூட்டுவது மற்றும் நிலத்தில் புதைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகரசபை அறிவித்துள்ளது.

இறப்பர் பொருள்களை எரியூட்டுவது மற்றும் நிலத்தில் புதைப்பதால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசடையும். அநேகமான குடியிருப்புகளில் இறப்பர் பொருள்களை எரியூட்டி வருகின்றனர்.இவற்றை எரியூட்டுவதனால் சுவாசத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே பொது மக்கள் இறப்பர் பொருள்களை மாநகர கழிவகற்றும் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாநகர ஆணையாளர் வாகீசன் கேட்டுள்ளார்.

Related posts: