இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, February 23rd, 2024

இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார். அரசியல்வாதிக்கு இது மிகவும் கடினமான விடயம் என ராஜபக்ச தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இந்த இரங்கல் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: