இறக்குமதி பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, August 10th, 2021

இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்  

தற்போது உள்ளூர் சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: