இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு!

Friday, June 3rd, 2022

இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 இற்கு 100 சதவீதமாக அதிகரித்தமை காரணமாகவே அனைத்து மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இதற்கமைய வைன், விஸ்கி, ரம், ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வற் வரி அதிகரிப்பு காரணமாக நேற்றுமுதல் அமுலாகும் வகையில் உள்ளூர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts: