இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி!

Tuesday, July 18th, 2017

அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு காரணமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையானது கடந்த ஜூன் மாதத்தில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தவிர வேறு வாகன வகைகள் 39,000 – 40,000 இற்கும் இடைப்பட்ட அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும் இது கடந்த மாதத்தில் 13,000 ஆக குறைந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவுகள் இதன் பிரதானமான காரணமாக இருப்பதுடன், வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய இறக்குமதி வரி மற்றும் ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளமை போன்ற காரணங்களினாலும் வாகன இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: