இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு வரி அதிகரிப்பு!

Tuesday, June 26th, 2018

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பெயரிடப்படும் பழ மரங்களை அனுமதியின்றி வெட்டுவதை தடைசெய்யும் திட்டமொன்றையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய உற்பத்திகளுக்கு கூடிய பெறுமதியை பெற்றுக்கொடுத்தலே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும். அதன்படி உள்நாட்டு பழ உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் வறுமையை இல்லாதொழித்து, அனைவருக்கும் அனுகூலங்களை பெற்றுத்தரும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

Related posts: