இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் -உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் எதிர்வுகூறல்!

Thursday, March 23rd, 2023

பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலரின் உயர்வுடன் எதிர்காலத்தில் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், டொலரின் பெறுமதி குறைந்துள்ளதை விட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், டொலரின் பெறுமதி கணிசமாகக் குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மொத்த விற்பனைச் சந்தையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: