இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்து!

அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் தீர்வை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்பு!
பொஸிஸாரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்திகதி நீடிப்பு - பொலிஸ் தலைமையகம்!
கடல்வழியாக தப்பி செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது!
|
|