இறக்குமதி அரிசிக்கான வரிச் சலுகைக்காலம் நீடிப்பு!

கடந்த மாதம் 31ஆம் திகதி முடிவடையவிருந்த வரிச் சலுகை அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு ஐந்து ரூபாவை மாத்திரம் விசேட வரியாக விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் கூடுதலான விலைக்கு அரிசியை விற்பனை செய்ய சிலர் முயன்று வருகின்றமை தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளன. கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவிற்கும், ஒரு கிலோ நாட்டரிசி 72 ரூபாவிற்கும், நாட்டரிசி 70 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவது அவசியமாகும்.கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்யப்படும் அரசியின் விலையை பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எந்தத் தேவையும் அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய வறட்சியான காலநிலையினால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனைத் தடுப்பதற்காக தீர்வையற்ற முறையில் அரசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் கீழ் இரண்டு லட்சத்து 17 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
Related posts:
|
|