இறக்குமதியான ரின் மீன்களின் 184 மாதிரிகளில் 149 நுகர்வுக்கு தகுதியற்றது – அமைச்சர் ராஜித !

Saturday, June 9th, 2018

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன் கொள்கலன்களிலிருந்து பெறப்பட்ட 184 மாதிரிகளில் 149 மாதிரிகள் நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகச் சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் ரின் மீன் நுகர்வுக்கு உகந்ததல்ல என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து ரின் மீன்களையும் பரிசோதனை செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

தற்போதுவரை 60 கொள்கலன்கள் பரிசோதனை செய்யப்பட்டு இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இனிமேல் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து ரின் மீன்களினதும் மாதிரிகளைப் பெற்று அதனைப் பரிசோதனை செய்வதுடன் சந்தையிலுள்ள ரின் மீன்களையும் பரிசோதளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

Related posts: