இறக்குமதியாகும் உருளை கிழங்குக்கு விசேட வரி – அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை!

Sunday, February 12th, 2023

இறக்குமதியாகும் உருளை கிழக்குக்கான விசேட வரியொன்றை விதிக்க கோரியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், வெலிமடை – பொரலந்த பிரதேசத்தில் விதை உருளைக்கிழங்கு அறுவடை நேற்று (11) ஆரம்பமானது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளையும் உள்ளூர் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையையும் பாதுகாக்கும் நோக்கில் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய்வதற்கு பதிலாக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் ஒவ்வொரு காலப்பகுதியிலும், ஒவ்வொரு அரசாங்கமும் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதால் உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடையை விவசாயிகள் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாட்டில் பெருந்தொகை முதலீடு செய்து உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே, இக்கடிதத்தை அனுப்பி வைத்தும் நிதியமைச்சின் அதிகாரிகள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், நாளை (13) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விடயங்களை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: