இரு வாரங்களில் பால்மாவுக்கு விலைச் சூத்திரம்!

Thursday, January 24th, 2019

எதிர்வரும் 02 வாரங்களில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் சில அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது எரிபொருளுக்கு போன்றே பால்மாவிற்கும் விலைச் சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பால்மாவுக்கு காணப்படுகின்ற விலைக்கு அமைவாக நாட்டிலும் பால்மாவின் விலை மாற்றமடையும் வகையில் குறித்த விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுவூட்டும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு - இராஜாங...
பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் த...
பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்க உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சிறு நிதியில் பிரதேசங்களி...