இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு வழங்கப்படும் – இந்தியா நடவடிக்கை!

Tuesday, January 19th, 2021

இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் முதலில் நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியன்மார், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலைதீவுகள் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது என்றும் அதன்பிறகு, சம்பந்தப்பட்ட நாடுகள் சீரம் நிறுவனம் அல்லது பாரத் பயோடெக் ஆகியவற்றிலிருந்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை கடந்த சனிக்கிழமைமுதல் பாவனைக்கு எடுத்துக்கொள்ள இந்தியா அரசாங்கம் தீர்மானித்து. முதல்நாளில் ஏறத்தாழ 1.9 இலட்சம் பேர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: