இரு பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு!
Tuesday, October 11th, 2016
பிரித்தானியாவில் பிறந்த ஒலிவர் ஹார்ட் மற்றும் பின்லாந்தின் பெக்ட் ஹோம்ஸ்ட்ரோமிற்கு பொருளாதாரத்திற்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள், அரசாங்கங்கள் மற்றும் வணிகம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆய்வுகளை மேற்கொண்டதற்காகவே நோபல் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஒலிவர் ஹார்ட் குறிப்பாக அரசு சேவைகளை தனியார் மயமாக்கல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தார். மேலும் குறைந்த செலவில் உயர்தரமான சேவைகளை அரசுகள் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.
இருவரும் நோபல் விருதுக்கான 8 மில்லியன் சுவிடிஷ் கிரோன் (928,000 டொலர்) பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
மருத்துவம், இரசாயனம், பெளதீகம் மற்றும் அமைதிக்கான நோபல் விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே பொருளாதாரத்திற்கான நோபல் விருது நேற்று வெளியானது. இந்த இரு நிபுணர்களினதும் பணி உண்மையான வாழ்வில் ஒப்பந்தம் மற்றும் நிறுவனங்கள் பற்றி புரிந்து கொள்ள உதவியதாக நோபல் குழு குறிப்பிட்டுள்ளது.பொருளாதாரத்திற்கான நோபல் விருது கடந்த 1968 ஆம் ஆண்டிலேயே நோபல் விருதுகளுடன் சேர்க்கப்பட்டது. எனினும் நோபல் விருது 1895 தொடக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
Related posts:
|
|