இரு துருவங்களும் இணைவு : பேச்சுவார்த்தை வெற்றி!

Tuesday, July 17th, 2018

அமெரிக்கா – ரஷ்யா இடையே நடந்த உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்ததாக டிரம்ப் மற்றும் புதின் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டமையை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் தனக்குத் தென்படவில்லை எனவும் புட்டினுடனான சந்திப்பு நல்லதொரு ஆரம்பம் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“பனிப்போர் நிலவிய காலத்துக்கு பின் நடந்துள்ள இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதாக இருவரும் கருதுகிறோம். இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் சர்வதேச பாதுகாப்பை கவனிப்பது பொறுப்பாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு எந்த விதத்திலும் இல்லை” என புதின் கூறியுள்ளார்.

Related posts: