இரு தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் : பெப்ரவரி முதலாம் திகதி வாக்களிக்க முடியும் -கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் !

Sunday, January 28th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தில் 113 நிலையங்களில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது என கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 இற்கான தபால்மூல வாக்களிப்பு இரு தினங்கள் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் 17159 பேர் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

ஏற்கனவே 12 நிலையங்களில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ள நிலையங்களில் நேற்றுமுன்தினம் 101 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

அலுவலக நேரத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும் எனவும் நேற்றைய தினமும் வாக்களிப்பு நடைபெற்றது. இந்த இரு தினங்களிலும் வாக்களிக்கத் தவறவிட்டவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்திற்குச் சமுகமளித்து வாக்களிக்க முடியும் எனவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமலராஜ் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில் இருந்து தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் அதிகாலை முதல் பேருந்து மற்றும் ஏனைய வாகனங்களில் மாவட்டத்தில் உள்ள தபால் மூலம் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts: