இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

இரு கப்பல்களில் இருந்து 120,000 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
குறித்த இரு கப்பல்களுக்கும் 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மற்றைய கப்பலில் இருந்து டீசல் மற்றும் விமான எரிபொருள் என்பன தரையிறக்கம் செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதில் விமான சேவைக்கு தேவையான எரிபொருள் மற்றும் டீசல் என்பன அடங்குவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் பருவ மழைக்கு முன் நிலக்கரி தேவையான நிலக்கரியும் கிடைத்துள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். நுணாவில் பகுதியில் பிறந்து 11 நாட்களேயான குழந்தை தாய்ப்பால் புரைக்கேறிப் பலி!
இன்றைய தெரிவுக்குழுவில் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு!
வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
|
|