இரு ஆவா குழு உறுப்பினர்கள் கைது!

Tuesday, July 11th, 2017

குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டுள்ள நிலையில், பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் கைது செய்யப்பட்ட இவ் இருவரும் ஆவா குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரிய வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.இந்த சம்பவங்கள் காரணமாக பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஐந்து பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: